Home செய்திகள் அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு.

அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு.

by mohan

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், 897 பயனாளிகளுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில்: “மதுரை மாவட்டத்தில் ஒராண்டில் 1 இலட்சம் பேருக்கு 300 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.தமிழகம் முழுதும் நலத்திட்டங்கள் செயலடுத்தப்பட்டு வருகிறது.அதிமுக அரசு விட்டு சென்ற 6 இலட்சம் கோடியை சமாளித்து நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.தமிழக முதல்வர் எப்போதும் மக்களை மட்டுமே நினைத்து அவர்களுக்காக பாடுபட்டு வருகிறார், பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகைகளை பெற்று தர வேண்டும், அண்ணாமலை மக்களுக்காக ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வேண்டும், முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார், பொது மக்களிடம் யாரும் லஞ்சம் கேட்டால் உடனடியாக காவல்துறையை அழைக்கலாம் என, முதல்வர் அறிவித்து உள்ளார்.அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒன்றிய அரசு எய்ம்ஸ்க்கு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது, தமிழக அரசுக்கு கடன்கள் உள்ள நிலையிலும் 1 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.மத்திய தொகுப்பிலிருந்து வர வேண்டிய மின்சாரம் வராத காரணத்தால் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது” என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!