Home செய்திகள் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் பணிகளுக்கு இடையூறாக அனுமதியை மீறி வாகன நிறுத்தம்.கண்டுகொள்ளதா மாநகராட்சி.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் பணிகளுக்கு இடையூறாக அனுமதியை மீறி வாகன நிறுத்தம்.கண்டுகொள்ளதா மாநகராட்சி.

by mohan

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 42 கோடியில் செலவில் மல்டி லெவல் பார்க்கிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 110 நான்கு சக்கர, 1400 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் செய்ய முடியும் என கூறப்படுகிறது.இதனால் மதுரை மாநகரில் கணிசமாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும், மேலும் தற்போது வரையில் 98 சதவீதம் பணிகள் முடிவடைந்து பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறப்பு விழா காண உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்களை பலரும் அனுமதியை மீறி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.தொடர்ந்து கட்டிட பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருள்களை கொண்டு வருவதற்க்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பணியாட்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!