Home செய்திகள் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரருக்கு மாவட்ட ஆட்சியாளர் பாராட்டு.

தீயணைப்பு மற்றும் மீட்பு வீரருக்கு மாவட்ட ஆட்சியாளர் பாராட்டு.

by mohan

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் ஏப்ரல் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி இரவு 9 மணி அளவில் பாதாளச் சாக்கடையில் இறங்கி மோட்டார் பழுது நீக்க முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அவர்களை உயிருடன் மீட்பதற்கு எவ்வளவோ முயற்சித்தும் அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை எனினும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையதீ தடுப்பு வீரர் கார்த்திக் என்னும் வீரர் உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்து துரிதமாக செயல்பட்டு முதலில் இரண்டு உடல்களை மீட்டெடுக்கப்பட்டது மூன்றாவது உடல் எடுப்பது மிகவும் காலதாமதம் ஆனது எனினும் இவர் உயிரை துச்சமாக நினைத்து துணிச்சலுடன் கீழே இறங்கி மூன்றாவது உடலை எடுப்பதற்கு செயல்பட்டார் இவரது செயல்பாடு அப்பகுதி மக்களிடையே மிகுந்த சம்பவ பாராட்டுதலைப் பெற்றது சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியாளர் இதை கவனித்த மாவட்ட ஆட்சியாளர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அலுவலகத்திற்கு வரவழைத்து பொன்னாடை போற்றி பரிசும் வழங்கினார்

. வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com