Home செய்திகள் சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்தும் மக்கியம் போன நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர்.

சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்தும் மக்கியம் போன நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர்.

by mohan

மதுரை மாவட்டம்.அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தகுளம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்து. முளைத்தும் மக்கிப்போன நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர்மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நெல் விளைவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டு வந்ததுதமிழக அரசு ஆங்காங்கேநெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்து வந்ததுஇதன் தொடர்ச்சியாக.அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்த குளத்தில் கடந்த சில நாட்களாக செயல்பட்டுவந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை.விற்பனை செய்து வந்தனர்இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்மூட்டைகள் சமீபத்தில் பெய்த கோடை மழையின் காரணமாக முற்றிலுமாக நனைந்து மறைத்தும் மக்கியும் காணப்படுகிறதுவிவசாயிகளிடமிருந்து கொள்முதல் பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு எந்தவித பணம் வழங்காததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்தற்போது மழையில் நனைந்து வீணாகி வருவதால் இன்னும் கூடுதல் நஷ்டத்தை தருவதாக கூறுகின்றனர்அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முழுவதுமாக நனைந்து மூட்டையின் அடியில் கரையான் பிடித்தும் முழுவதுமாக முளைத்தும் சில முட்டைகள் மக்கியும் காணப்படுகிறதுஆகையால் உடனடியாக அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com