Home செய்திகள் சாத்தையாறு அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

சாத்தையாறு அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

by mohan

மதுரை மாவட்டத்தில் மானாவாரி பாசன பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டி கண்மாய் பாசன விவசாயிகள் பட்டதாரிகள் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்மேலும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இருந்த தகுதியான நபர்களையும் சேர்த்து முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்வாக்காளர் பட்டியலில் உள்ள உறுப்பினர் வரிசையில் பெயர்கள் மாறி உள்ளதாக அ.கோவில்பட்டி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் புகார் தெரிவிக்கின்றனர்கோவில்பட்டி கண்மாயில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மூலம்சாத்தையாறு அணை நீரினை பயன்படுத்தும் விவசாய சங்க தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புகோவில்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உள்ளதால் இப்பகுதி விவசாயிகளை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்காக வாக்குச் சீட்டில் உள்ள பெயர்களை ஆளுங்கட்சியினர் நீக்கி இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தற்போது பெயர்களைசேர்க்க சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கின்றனர்இதனால் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு 30ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தலை தற்காலிகமாக தள்ளி வைக்கவேண்டும் அனைத்து உறுப்பினர்களும் போட்டியிடும் வகையில் உறுப்பினர் பட்டியலை சரி செய்ய வேண்டும் இன்று பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com