மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோவில் ஊரணி கரை அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது அவருக்கு திடீரென காக்காவலிப்பு ஏற்பட்டுள்ளது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் முதலில் இரும்பு மற்றும் சாவி கையில் கொடுத்து பார்த்தார்கள் அப்பொழுதும் அவருக்கு காக்கா வலிப்பு நின்றதாக தெரியவில்லை மேலும் முற்றிலும் சுயநினைவு இன்றி இருந்தார் உடனடியாக அப்பகுதி மக்கள் 108 அவசர கால கட்டுப்பாட்டு அரை தகவல் தகவல் தெரிவித்தனர் உடனடியாக பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள 108 அவசர கால ஊர்தி விரைந்து வந்து வலிப்பின் துடித்துக் கொண்டு இருந்த நபரை முதலுதவி அளித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர் இதுகுறித்து சுப்ரமணியபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.