Home செய்திகள் கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது ஜாதி உணர்வுகளை தூண்டுவதாக போலீசில் புகார்.

கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது ஜாதி உணர்வுகளை தூண்டுவதாக போலீசில் புகார்.

by mohan

மதுரை மாவட்டம் கத்தோலிக்க திருச்சபையில் ஜாதி பிரச்சனை வளர்த்தும், பாலியல் புகாரில் சிக்கி வரும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரும், மதுரை மறைமாவட்ட பேராயருமான அந்தோணி சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் தலைவர் செபாஸ்டின் சூசைராஜ் கூடல்புதூர் காவல்நிலையத்தில் போலீசில் புகார் மனு அளித்தார்.அவரது மனுவில் கூறியிருப்பதாவது:மதுரை கத்தோலிக்க பேராயர், முன்னாள் ஆயர் பேரவை தலைவராகிய அந்தோணி பாப்புசாமி ஜாதி ரீதியான பாகுபாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையில் நடந்து வருகிறார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி ரீதியாக உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நோக்கில் செயல்பட்டு சட்டத்திற்கும், சமூகத்திற்கும் முரணாக ஜாதியை வளர்த்து வருகிறார்.ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்காத தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி, எஸ்டி என அனைத்து ஜாதி ரீதியாக முத்திரை குத்தி செயல்படுத்துவது சரியானதாக இல்லை. 18 மாவட்டங்களில் ஒரு தலித் கிறிஸ்தவர் தவிர வேறு யாரையும் ஆயராக வருவதற்கு அனுமதிப்பது இல்லை. தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை என்று சுவர் எழுப்பி ஜாதி வெறியை தூண்டுகிறார். சிவகங்கை மாவட்டத்தில் செயலர் சூசை மாணிக்கம் தனது உடையார் பிரிவினரை மட்டுமே சிவகங்கை பேராயராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாக ஜாதியை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.ஒரு வார இதழில் பேராயர் அந்தோணி பாப்புசாமியின் காம லீலைகள் என்ற பெயரில் செய்தி வெளியிட்டு உள்ளது அவரது பாலியல் அத்துமீறல்களை காட்டுகிறது. இதனால் அருட்சகோதரிகள் செய்யும் பாலியல் பிரச்சனைகள் குறித்து வெளியிடும் மாணவிகள் மர்ம மரணம் குறித்து செய்தி வெளியிட்டதற்கு பேராயர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது தான் செய்தது உண்மைதான் என்று மௌனம் காப்பது போல் உள்ளது. எனவே மாவட்ட காவல் ஆணையாளர் இது குறித்து விசாரித்து கிறிஸ்தவத்தில் ஜாதி ரீதியான உணர்வுகளை தூண்டி சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை பெண்கள் சந்திக்க பயப்படும் வகையில் சமூக பெண்களுக்கு மன உளைச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தி கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தி வரும் முன்னாள் ஆயர் பேரவை தலைவர், மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவரது மனுவில் கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!