Home செய்திகள் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ,முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ,முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

by mohan

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக, கோடை காலத்தை ஒட்டி நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 48 நாள் நடைபெறும், இந் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஆர் பி உதயகுமார் பேசியதாவது:தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டு திட்டங்களை திமுக அரசு தடை செய்து வருகிறது.பட்ஜெட்டில் போதுமான மற்றும் புதுமையான திட்டங்கள் ஏதும் இல்லை.முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயர்த்துவது தொடர்பாக மற்றும் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த கேரளா முதல் அமைச்சரிடம் பேசி இருக்க வேண்டும். ஆனால் , அதை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களின் உரிமைப் பறிபோவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.நீட் தேர்வு மசோதாவை திமுக அரசு சென்னையைத் தாண்டி கொண்டு செல்லவில்லை .எங்கள் ஆட்சியில் ஜனாதிபதி ஒப்புதல் வரை கொண்டு சென்றோம் .இவர்கள் ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட நீட் ரத்து செய்யும் ரகசியம் மட்டுமே உள்ளது என்று தெரிவிப்பார்கள்.தொடர்ந்து, திமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி. கருப்பையா, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அம்மா பேரவை செயலாளர் தன்ராஜ் ,மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி ,மாவட்ட பொருளாளர் வக்கில் திருப்பதி ,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ,மகளிர் அணி செயலாளர் லட்சுமி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் பி குமார் ,வாடிப்பட்டி மணிமாறன், பாலாவாவிடமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, வாவிடமருதூர் வடக்கு கிளை கழக செயலாளர் ஆர் பி கோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரி ,விவசாய அணி செயலாளர் குமாரம் பாலன் ,கல்வேலி பட்டி கருப்பையா ,தென்கரை நாகமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!