Home செய்திகள் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ஒன்றிய அரசு பின்பற்றும் வகையில் உள்ளது என மத்திய அரசு பாராட்டியது.

தமிழக அரசின் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ஒன்றிய அரசு பின்பற்றும் வகையில் உள்ளது என மத்திய அரசு பாராட்டியது.

by mohan

 மதுரை விமான நிலைய சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தமிழக மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி மற்றும் தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்:மதுரை மாவட்டத்தைப் பொருத்த அளவில் மாநில நெடுஞ்சாலை 369 கிலோமீட்டர், மாவட்ட இதர சாலை 536 கிலோமீட்டர், ஓடிஆர் 835 கிலோமீட்டர், மதுரையை பொருத்தவரை மாநில அரசு கட்டுப்பாட்டில் 1802 கிலோமீட்டர் உள்ளது. முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை சட்டசபையில் அறிவித்துள்ளோம். ஒரு வழி சாலையை இரண்டு வழி சாலையாக்குவது, இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். வாகன போக்குவரத்து அதிகமான காரணத்தினால் சாலையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது, சாலைகளை விரிவு படுத்தும் போது சாலையோர மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மரங்களை வெட்டுவதால் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டார். அந்த அடிப்படையில் இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இன்று மதுரை விமான நிலைய சாலையில் 250 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை எல்லாம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து 8 அடி கன்றுகளாக மொத்தமாக வாங்குகிறோம்.சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பது குறித்த கேள்விக்கு:மத்திய, மாநில அரசுகள் சாலைபாதுகாப்பு என்கின்ற அடிப்படையில் பணம் ஒதுக்குகிறார்கள். இந்த சாலை பாதுகாப்பு விஷயத்தில் நெடுஞ்சாலை துறை, காவல் துறை, மோட்டார் வாகனத் துறை, கல்வித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தப்பட்டுள்ளது. இதில் அதிகமான பங்குகளை வகிப்பது நெடுஞ்சாலைத்துறை தான். வேகக் கட்டுப்பாடு அமைப்பது, சைன் போர்டுகள் வைப்பது போன்றவற்றை நெடுஞ்சாலைத்துறை தான் செய்து வருகிறது. சாலை விபத்துகளை குறைப்பது குறித்து தமிழக முதல்வர் அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இந்த காரணத்தால்தான் தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 15 சதவீத வாகன விபத்து குறைந்துள்ளது இந்த திட்டத்தை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று ராஜ்யசபா கூட்டத்தில் நிதின்கட்காரி குறிப்பிட்டுள்ளார்.சுங்க சாவடி விவகாரம் குறித்த கேள்விக்கு:ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்வர் என்னிடம் முதலில் கூறியது சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும். கேரளாவை விட தமிழகத்தில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது என்றார். இது சம்பந்தமாக நிதின்கட்காரி அவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன்பாக சுங்கச்சாவடிகளை குறைப்பது குறித்து ராஜ்யசபாவில் அறிவிக்கப்பட்டது.அரசு பள்ளி கட்டிடங்கள் சிதிலமடைந்து வருகிறது குறித்த கேள்விக்கு:எந்தெந்த அரசு பள்ளி கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது, எவையெல்லாம் சீரமைக்க வேண்டும் என்று இருவிதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது முதல்வர் அறிவிப்பார் அதனைத்தொடர்ந்து புதிதாக கட்டிடங்கள் கட்டப்படும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com