Home செய்திகள் முள்ளிப்பள்ளத்தில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வேலிகளால் பொதுமக்கள் அவதி .

முள்ளிப்பள்ளத்தில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வேலிகளால் பொதுமக்கள் அவதி .

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் வீணாகும் தண்ணீரை கொண்டு செல்லும் கழிவு நீர் செல்லும் கால்வாய் பாதைகளில் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கழிவு நீர் வெளியே செல்ல முடியாத அளவிற்கு தற்போது முற்றிலுமாக வேலியைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர் இதனால் அந்த பகுதிக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பொதுப் பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலியை போட்டவர்கள் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்காலை ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால் மழைக்காலங்களில் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் உள்ள வ உ சி தெரு காமராஜர் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மேலே ஏறிச் சென்று வீடுகளுக்குள் செல்லம் அபாயமும் கழிவுநீர் கால்வாயில் பன்றிகள் தொல்லை யால் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும். எந்த நடவடிக்கையும் இல்லை என்றும்கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பதறகு முன்பாக வேலிகளை அகற்றி பொதுப் பாதையை உண்டாக்கி கால்வாயை தூர்வார வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com