Home செய்திகள் இருசக்கர வாகனம் மோதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சி.

இருசக்கர வாகனம் மோதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சி.

by mohan

 மதுரைதிருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகன் கார்த்திக் விக்னேஷ் 22 இவர் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது மாலை 5 மணி அளவில் சகோதரரின் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றவர் மாலை கல்லூரி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பெட்ரோல் பங்கில் இருந்து விளாச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவன் கார்த்திக் விக்னேஷ் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் விக்னேஸ்வரன் ஹெல்மெட் அணியாததால் மோதிய வேகத்தில் சாலை மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயமடைந்த சீனிவாசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் சம்பவத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற மாணவன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தடை செய்ய வேண்டும் எனவும் இதை பள்ளி நிர்வாகம் கவனிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது இதேபோன்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் இருசக்கர வாகனத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் குறிப்பிடுகின்றன குறிப்பிட்ட அளவு வேகத்திலேயே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கையும் பெற்றோர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக உள்ளது மேலும் முட்டா காலனி இருந்து திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை வரை தடுப்புகள் அமைத்து வாகனத்தில் வரும் வேதத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விபத்துகளை குறைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!