Home செய்திகள் கணபதி நகர் குடிசை குடியிருப்பு பகுதியில் சாலையோர கால்வாயில் சிதைந்த நிலையில் பெண் சடலம் கொலையா.? என்பது குறித்து போலீசார் விசாரணை.

கணபதி நகர் குடிசை குடியிருப்பு பகுதியில் சாலையோர கால்வாயில் சிதைந்த நிலையில் பெண் சடலம் கொலையா.? என்பது குறித்து போலீசார் விசாரணை.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கணபதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோர கழிவுநீர் கால்வாயில் சடலம் ஒன்று மிதப்பதாக அவனியாபுரம் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் கழிவுநீர் கால்வாயில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.தொடர்ந்து கால்வாயில் மிதந்த சடலம் பெண் சடலம் என்றும் சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட நபராக இருக்கலாம் என்றும்., ஒரு வாரத்திற்கும் மேலாக கால்வாயில் மூழ்கியதால் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது கண்டறிந்துள்ளனர் இறந்தவர் யார் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணமல் போனவர்கள் பற்றி உள்ள தகவலை விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!