Home செய்திகள் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு .

மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு .

by mohan

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கலைமகள் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சுந்தரி வயது 62 இவர் தனியாக வசித்துவருகிறார் இந்தநிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் வீட்டில் கரும்புகை வந்துள்ளது இதை கண்டவுடன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் எனினும் சாலை குறுகலாக இருந்ததால் பெரிய தீயணைப்பு வாகனம்உள்ளே செல்ல முடியவில்லை அடுத்த சில நிமிடங்களில் குறுகிய சாலைகள் செல்வதற்காக சிறிய ரக வாகனத்தை வரவழைத்து துரிதமாக செயல்பட்டு வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது தீ விபத்து வீட்டிலிருந்த கிரைண்டர் மிக்ஸி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது எனினும் தீயணைப்பு துறையில் துரித செயல்பாட்டால் அக்கம்பக்கத்தில் தீ பரவாமல் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது மேலும் அங்கு கூடியிருந்த பெண்களிடம் நிலைய அலுவலர் வெங்கடேசன் கூறுகையில் இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள் இரவு தூங்கும் பொழுது கேஸ் ரெகுலேட்டர் அணைத்து வைத்து வைத்துவிட வேண்டும் ஒரே பிளக் பாயிண்டில் மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட உயர் மின் அழுத்தம் கொடுக்கும் இணைப்புகளை கொடுக்க வேண்டாம் எனவும் தீப்பற்றி எரிந்தால் பதட்டப்படாமல் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட வேண்டும் எனவும் புகை மூட்டத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் அதனால் பயப்படாமல் உடனடியாக வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுங்கள் எனவும் அப்பகுதி உள்ள பெண்களுக்கு அறிவுரை கூறினார் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com