63
மதுரை நேரு நகரை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெக்கானிக் நிறுவனத்திற்குள் புகுந்த ஒரு அனில் அங்கிருந்து வெளியேறாமல் சுத்தி சுத்தி வந்துள்ளது.அதற்கு தானியங்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்த துவங்கிய இளைஞர் வினோத்திடம் நெருக்கம் காட்டிய அனில் பின்னர் அவருடனே இருக்க துவங்கியது.
வீட்டில் வினோத்துடன் இருக்கும் அனில் பணியிலும் அவரது தோளில் இருந்து கொள்வது, அவரது பாக்கெட்டில் இருந்து கொள்வது என இளைஞர் வினோத்தை பிரியாமல் இருந்து வருகிறது.அனிலின் அன்பை புரிந்து கொண்ட இளைஞர் அனிலிற்கு உணவு தண்ணீருடன் அன்பையும் செலுத்தி வளர்த்து வருகிறார். இளைஞர் அனிலிடையே உள்ள அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்p
You must be logged in to post a comment.