Home செய்திகள் தென் தமிழகத்திலேயே முதல்முறையாக ஷாப்பியன் டிரான்ஸ்கத்திடர் மூலம் இருதய வால்வு அடைப்பு நீக்கும் சிகிச்சை அறிமுகம்

தென் தமிழகத்திலேயே முதல்முறையாக ஷாப்பியன் டிரான்ஸ்கத்திடர் மூலம் இருதய வால்வு அடைப்பு நீக்கும் சிகிச்சை அறிமுகம்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள ஹனா ஜோசப் மருத்துவமனையில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக எட்வர்டு டெலிவரி சிஸ்டம் மூலம் ஷாப்பியன் 3 டிரான்ஸ்காத்திடர் இருதய வால்வு சிகிச்சை நடைபெற்றுள்ளது.கடந்த ஒரு வருட காலமாக சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இலங்கைய சேர்ந்த செல்வராணி (வயது 82 )முதிய பெண்மணிக்கு இருதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளார் மேலும் இவருக்கு ஹைபர்டென்ஷன், தைராய்டு கட்டி போன்ற இணை நோய்களும் இருந்தது.நோயாளி வயதானவராக இருந்ததாலும் மேலும் அவருக்கு இணை நோய்கள் இருந்ததால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய முடியாத சூழலல் இருந்தது எனவே சுயநினைவுடன் இருக்கும் நிலையிலேயே ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆஞ்சியோகிராபி முறையில் எட்வர்ட்ஸ் ஷாப்பியன் 3 டிரான்ஸ்காத்திடர் ஆர்டிக் வால்வு இம்பிளாண்டேஷன் செய்யப்பட்டது.இதன் மூலம் பலமணிநேரம் செய்யப்படவேண்டிய அறுவை சிகிச்சை வெறும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெரிதளவு பாதிப்பின்றி இந்த சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்த ஒரே நாளில் அந்த நோயாளி சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார்.இதுகுறித்து ஆனா ஜோசப் மருத்துவமனையில் இருதய அறிவியல் இயக்குனர் மற்றும் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் கூறுகையில்:

இருதயம் சிக்கலான வால்வுகளை உடைய குழாய் போன்றதாகும். எனவே வயோதிகத்தால் ஏற்படும் கோளாறுகள் அயோத்தி ஸ்டெனோசிஸ் ஏற்பட வழிவகுக்கும். இருதய வாழ்வின் இந்தப் பகுதியில் இருந்துதான் உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செல்லும் இந்த வாழ்வு குழுவினால் பொதுவாக ஓபன் ஹார்ட் சர்ஜரி பரிந்துரைக்கப்பட்டது.அதே சமயம் எல்லா வயதினருக்கும் மயக்கமருந்து கொடுத்து இந்த சிகிச்சை செய்ய முடியாது.நோயாளியின் நலன் கருத்தில் கொண்டு நோயாளியின் முன் தொடைப்பகுதியில் ஓபன் சர்ஜரி இல்லாமல் சாவித்துவாரம் வழியாக டிரான்ஸ் கத்திட்டர் மூலம் சிகிச்சையில் வாழ்வு மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்டது.இந்த முறை உலக அளவில் ‘டிரான்ஸ்கத்திடர் வால்வு இம்பிளாண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி சிகிச்சைக்கு அதிக கட்டணம் இருந்து நாளடைவில் குறைந்தது இந்த சிகிட்சைக்கு கட்டணம் குறைய வாய்ப்பு.இந்த சிகிச்சை முறையில் இருதய வால்வு மாற்றப்பட்ட நோயாளி இரண்டு நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் எனவே நோயாளிக்கு இணை நோய்கள் இருந்தாலும் இந்த சிகிச்சை முறை மூலம் நலம் அடையலாம். இந்த சிகிச்சையை தற்போதைக்கு விலை உயர்ந்ததாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் இதற்கான விலை கண்டிப்பாக குறையும் அதனால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com