தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான C.M. வினோத் தலைமை தாங்கினார். குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், தலைவர் அப்துல் ஜப்பார், அப்பா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக லொகேஷன் மேனேஜர் ஜெகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். உடன் ஜாஹீர், நடிகர் பருத்திவீரன் புகழ் ஷாஜகான், பன்னீர்செல்வம், இவர்களுடன் சங்க உறுப்பினர்கள் தங்கப்பாண்டி, மணிகண்டன், செந்தில் ராஜன்,கணேஷ், செல்வம், விஜய், பழனிவேல், கணேசன், திருமங்கலம் கவிதா, கடலூர் ரியா, தேவயானி, ஜெயராணி, ஜெயந்தி, கலா, தாமரை, குழந்தை நட்சத்திரம் பாலா சக்தி, சபரீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை சங்க அலுவலக மேலாளர் பாலா, ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் செய்திருந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.