Home செய்திகள் முழு ஊரடங்கால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்

முழு ஊரடங்கால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்

by mohan

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றது.முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறும், தற்போது முழு ஊரடங்கு என்பதால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தளவு உறவினர்களைக் கொண்டே கோவில் வாசலில் திருமணங்கள் நடைபெற்றது.இந்தத் திருமணங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில் வாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com