Home செய்திகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம். தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம். தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு.

by mohan

 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார்.உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.ஜல்லிக்கட்டுக்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஆயிரக் கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்டம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சார்பாகசிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்ட உள்ளது. அதேபோன்று, ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும்.திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் சார்பாக,சிறந்த மாடுபிடி வீரருக்குகார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போல், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com