Home செய்திகள் விபத்துகளை தடுக்க – நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வு அறை. மதுரை எஸ்.பி. திறந்து வைத்தார்.

விபத்துகளை தடுக்க – நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வு அறை. மதுரை எஸ்.பி. திறந்து வைத்தார்.

by mohan

 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் மதுரை – யா.ஒத்தக்கடையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பல்க் -ல் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையை இன்று வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் திறந்து வைத்தார்., இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் மண்டல சில்லரை விற்பனை தலைவர் எஸ்.மகேஸ், விற்பனை மேலாளர் கே.என்.செந்தில்குமார், ப்ளீடு மார்கெட்டிங் மேலாளர் ஜெகன்நாதன், விற்பனை துணை மேலாளர் சைத்தன்யா, யா.ஒத்தக்கடை கோகோ மேலாளர் ஆர்.சேகர் உள்ளிட்டோர் உடனிருத்தனர்.வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கர்., கேக் வெட்டி வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்., மேலும் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள், மாஸ்க் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார்.நெடுந்தொலைவில் இருந்து வாகனங்கள் ஓட்டி வரும் போது ஏற்படும் களைப்புகளை இது போன்ற ஓய்வு அறைகளில் சற்று ஓய்வு எடுத்தாலே சுறுசுறுப்பாக பயணிக்க ஏதுவாக இருக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்திய இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்ததோடு, நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்கும் முயற்சிக்கு பாராட்டுகள் என தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com