Home செய்திகள் மேலக்கால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம்: வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்:

மேலக்கால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம்: வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்:

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஒரு அணியாகவும், வார்டு உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் இருப்பதால், ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலக்கால் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் திமுகவை சேர்ந்தவராகவும், வார்டு உறுப்பினர் ஒன்பது பேர்களில் பாதிக்கு மேற்பட்டோர் திமுகவை சேர்ந்தவர் ஆகவும், மீதிப்பேர் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பதாகவும் தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் ,அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு அதிகாரிகளால் வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து சமரசம் செய்து வைப்பது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் தான் தாழ்த்தப்பட்டோர் என்பதால் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக வார்டு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய தன் காரணமாக அனைவரையும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரவழைத்து விசாரணை செய்து அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குப் பின்பும் சமரசம் அடையாத தலைவர் ,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால், ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் திமுக அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதில், வார்டு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் 7 பேர் ராஜினாமா செய்யப் போவதாக கூறுகின்றனர். மேலக்கால் ஊராட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையால் பொட்டல்பட்டி ஆகிய கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு உடனடியாக ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் தடையில்லாமல் நடைபெற உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com