Home செய்திகள் போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது. அமைச்சர் பேட்டி.

போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது. அமைச்சர் பேட்டி.

by mohan

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:ஒமைக்ரான் பரவல் குறித்த கேள்விக்கு:ஒமைக்ரான் தொற்றை பொருத்தவரையில் அதனுடைய பரவல் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு கம்மியாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் கொரோனா பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை.பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு:தீபாவளி பண்டிகையின்போது செய்ததுபோலவே தனித்தனியே ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் விடப்படும் எனவே கூட்ட நெரிசல் இருக்காது. கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்காது.பேருந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு:சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அவர் அறிவுறுத்தியது போல் பின்பற்ற வேண்டும்.புதிய பேருந்து வழங்கப்படுமா என்ற கேள்விக்கு:தேர்தல் வர உள்ளது பொங்கல் பண்டிகை உள்ளது அது மட்டுமின்றி உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ள வழக்கு ஒன்று உள்ளது இது எல்லாம் முடிவுக்கு வந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.பணிமனைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த கேள்விக்கு:தற்போது சென்னை மாநகரில் 2500 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும்.போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த கேள்விக்கு:போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரின் ஆலோசனை கேட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.சம்பள பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து துறையினர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு:போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செல்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க கூட்டங்கள் மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற வேண்டியது தற்போதுதான் நடைபெற்று உள்ளது. இது தொழிலாளர்களுக்கான அரசு அனைவரிடமும் எல்லா கோரிக்கையும் கேட்டுள்ளோம் இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நல்லதொரு தீர்வு கொண்டு வருவோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com