மதுரை மாநகராட்சிக்குட்ப்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் மாடக்குளம் பிரதான சாலையில் திடீரென பத்து அடிக்கு ஆழமும் 6 அடிக்கு அகலமும் கொண்ட பள்ளமானது ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக மாடக்குளம் பிரதான சாலையில் நாள்தோறும் மாநகர அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவு இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் திடீர் பலத்திற்கு காரணமாக பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றத்தால் மணல் அரிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடும் கூறப்படுகிறது.குறிப்பாக விடுமுறை நாள் என்பது நாள் போக்குவரத்து குறைவாக இருந்த சூழ்நிலையில் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது மேலும் இதற்கு முன்னதாகவும் இரண்டு முறை இதே பகுதியில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மற்றும் குடி நீர் குழாய் இணைப்புகளை முறையாக பராமரித்து இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.