Home செய்திகள் பள்ளி சுவற்றை பாழ்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை

பள்ளி சுவற்றை பாழ்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதே தனியார் பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயிலும் பள்ளி ஆண் பெண் இருபாலரும் இங்கு பயிலுவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.. கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையால் இந்த பகுதியில் சாலை புதுப்பிக்கப்பட்டது. சமயநல்லூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் நான்கு வழிச்சாலை வாடிப்பட்டி துணை மின் நிலையம் அருகே நான்கு வழி சாலையில் இருந்து பிரிந்து வாடிப்பட்டி வழியாக சாணம் பட்டி வரை சென்ற மீண்டும் நான்கு வழிச்சாலையில் இணைகிறது. வாடிப்பட்டியில் புதியதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் இருந்து சாணம் பட்டி வரை புதுப்பிக்கப்பட்ட ரோட்டில் மழைநீர் தேங்காமல் இருக்க ரோட்டின் வலது புறம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. நீதிமன்றத்திலிருந்து வாடிப்பட்டி புறநகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வரை வடிவமைத்து அதற்குமேல் சிமெண்ட் ஸ்லாப் புகழை பரப்பி மூடியுள்ளனர். அதுக்கு அடுத்து அமைந்துள்ள தனியார் பள்ளியில் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே வடிகால் வாய்க்கால் தோண்டப்பட்டு ஒரு சில இடங்களில் மட்டும் சீர் செய்து மேலே மூடியுள்ளனர். பள்ளியின் நுழைவாயிலில் பகுதி அதைத்தாண்டி பள்ளியின் பின்புறம் கொண்டு செல்லப்பட்ட இந்த வாய்க்கால் என்ன காரணத்தினாலோ அதோடு நின்றுவிட்டது..

இதனால் இந்த வாய்க்காலில் வரும் கழிவுநீர் மேலே செல்ல வழியில்லாமல் பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே தேங்கி நிற்பதால் காம்பவுண்ட் சுவரின் அடிப்புறம் கழிவுநீரால் அழிக்கப்பட்ட இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் இன்னுமொரு கொடுமையான விஷயம் இந்த கழிவுநீர் வாய்க்கால் தோண்டப்பட்ட பகுதியில் வாய்க்காலின் நடு புறத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது.அந்த மின் கம்பம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் அந்த சிமெண்டால் ஆன அந்த மின் கம்பம் அடி புறம் அரிக்கப்பட்டு எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. அப்படி இருந்தால் அது பள்ளியின் சுற்றுப்புற சுவரில் தான் விழும். அப்படி நேர்ந்தால் பெரும் விபரீதத்தை உருவாக்கிவிடும். ஏற்கனவே கொரானா பீதியில் இருக்கும் பள்ளி நிர்வாகம் பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீரால் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏதும் பாதிப்பு வந்துவிட கூடாது என்ற பயத்தில் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை அகற்றவும் வடிகால் வாய்க்காலை சீரமைத்து அந்தப் பள்ளிக்கும் அங்கு பயிலும் மாணவ மாணவியருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!