Home செய்திகள் மதுரையில் 4வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு புறக்கணிக்கின்றது மதுரை நடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்.

மதுரையில் 4வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு புறக்கணிக்கின்றது மதுரை நடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்.

by mohan

மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க68வது ஆண்டு விழா அவனியாபுரம் அசல் மலபார் மகாலில் நடைபெற்றது.நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் குற்றாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்..விழாவில் சிறப்பு விருத்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி. மதுரை நடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்வெங்கடேசன் கூறியதாவது.நுகர்பொருள் மொத்த வியாபரிகள் சங்கம் பல்வேறு சமூக பணி ஆற்றி வருகிறது.சங்க மருத்துவமனை சார்பில தினமும் 400 முதல் 500 பேருக்கு இலவச மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள பணிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.வணிகம், தொழில் மூலம் நாட்டின் பொருளாதாரம உயரும்மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய சிவில்விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆத்தியா சித்தியாவிடம் கோரிக்கை வைத்தோம்.ஆனல் மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு சென்னை ,திருச்சி , கோவை உள்பட 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே ஒரு விமான நிலையம் அமைக்க கோரிக்கை. விடுத்துள்ளனர். ஆனால் நீங்கள் 4வது சர்வ தேச விமான நிலையம் அமைக்க கோரிக்கையை ஏற்க முடியாது என கூறுகிறார்.GST வரியில் இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது இந்தியா முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் மொத்த ஜிஎஸ்டி வரி 7ஆயிரத்து,200 கோடி வரி கிடைத்துள்ளது.ஆனால் தமிழகத்தில் இருந்து மொத்தம் 7 ஆயிரத்து 800 கோடி வரி செலுத்துகிறோம்.இந்தியாவிலேயே ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளதுஆகையால் அதிக ஜிஎஸ்டி வரியின் கிடைக்கின்றது ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இந்தியா முழுமைக்கும் இரண்டாமிடம் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறது ஆகையால் இந்தியாவின் மொத்த வருவாய் தனிப்பெரும் வருவாயாக ஜிஎஸ்டி வரி செலுத்துவதால் தமிழகத்திற்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் இது குறித்து நான் எழுதிய பீட்டர் செய்தி பரபரப்பாக மத்திய அரசின் பார்வைக்கு சென்று உள்ளது என வெங்கடேசன் பேசினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com