Home செய்திகள் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை.

ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த என்பவர் கூறும் பொழுது நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆரம்பப்பள்ளி 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.முன்னாடி உள்ள முகப்புகள் இடிந்த நிலையில் உள்ளது. எப்போது இந்தக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.சுமார் நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது.கட்டிடத்தை தாங்கியுள்ள பில்லர்கள் அடித்தளத்தில் மிகவும் சேதமடைந்து உள்ளது. மற்றும் கட்டிடத்தில் மேலே தாழ்வாரத்தில் சிமெண்ட் சேதமடைந்து கம்பிகள் தெரிகிறது.இந்த கட்டிடம் எப்ப வேணாலும் இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும்.சேதமடைந்துள்ள இந்தக் கட்டிடம் விழுந்து பல்வேறு விபத்துகளை ஏற்படும் முன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது இங்கு பயிலும் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அருகிலுள்ள ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் தங்கி படிக்க வைப்பதாகவும் மேலும் அருகில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இருந்தும் பள்ளி நிர்வாகம் இடம் தர மறுப்பதாகவும் அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்மேலும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் மேல்நிலைப் பள்ளியில் இடம் தர மறுப்பதால் ஊராட்சி மன்ற சமுதாயக் கூடத்தில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து மாற்று இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com