Home செய்திகள் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு கிராம பொதுமக்கள் ஆதரவு.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு கிராம பொதுமக்கள் ஆதரவு.

by mohan

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையில் 2021-22 இந்த ஆண்டிற்கான கரும்புஅரவை பணிகளை துவங்க கோரி ஆலையின் முன்பு 9 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளகரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஊர்சேரி கிராமமக்கள் 200 க்கு மேற்பட்டோர்வபோராட்டத்தில் கலந்து கொண்டனர்.மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையில் 2021- 2022 இந்த ஆண்டிற்கான அரவை பணிகளை துவங்க கோரி கரும்பு விவசாயிகள் ஆலையின் முன்பு 9வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் கத்திருப்பு போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து. இன்று ஆலைக்கு அருகிலுள்ளஊர்சேரி கிராமமக்கள் சுமார் 200 க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்..மேலும் ஆலை பகுதியில் 60,000 டன் கரும்பு உள்ளதால் ஆலையின் அரவையை துவங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையின் பராமரிப்பு பணிகளுக்காகவும், கரும்பு வெட்டுகூலி முன்பணம் அரவை செய்தவுடன் விவசாயிகளுக்கு பணம் வழங்க வழிவகை கடனாக ஆலைக்கு ரூ.10 கோடி கடனாக வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி செலவை கணக்கிட்டு மத்திய மாநில அரசுகள் டன் 1 க்கு ரூ. 5,000 வழங்க வேண்டும். கிடப்பில் போடபட்ட உப மின் நிலைய பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர்.இதனை தொடர்ந்து ஆலையின் முன்பு கரும்பு விவசாயிகள் தொடர் கத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com