Home செய்திகள் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் இருந்துபெரியார் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் இருந்துபெரியார் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.

by mohan

 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி இரும்பாடி கணேசபுரம் பொம்மன் பட்டி அம்மசியபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மதுரை மற்றும் சோழவந்தான் வாடிப்பட்டி திருமங்கலம் உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணம் செய்கின்றனர் சமீபகாலமாக சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மற்றும் குறிப்பிட்ட அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பணிக்கு செல்லும் பொதுமக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது இலவச பேருந்து என்று அறிவித்துவிட்டு பேருந்துகளை முறையாக இயக்குவது இல்லை குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்வதற்கும் பணி முடித்து தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்கும் போதிய பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர்மேலும் ஆட்டோ டாக்ஸி போன்ற வாடகை கார்களில் பயணம் செய்வதால் அதிக செலவுகள் ஏற்படுவதாகவும் ஆகையால் எங்கள் கிராமத்திற்கு இலவச பேருந்தை நிறுத்திவிட்டு கட்டண பேருந்தை முறையாகவும் அதிக எண்ணிக்கையிலும் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்மேலும் இது குறித்து சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது இனிமேல் முறையாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக கூறினார் மேலும் இங்குள்ள பெண்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக ஆகையால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com