Home செய்திகள் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

by mohan

 மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் மூல வைகையில் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 70.11அடியை எட்டியது. இதனையடுத்து, வைகை ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 6 ஆயிரத்து 885 ஆக உள்ளது.தற்போது ,வைகை ஆற்றில் 12,000 கன அடி நீர் சென்று கொண்டிருப்பதால் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றுக்குள் இறங்கவோ,மாடுகளை புற்கள் மேயவோ அனுப்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.மதுரை கோரிப்பாளையம் கீழ்பாலம், திருவேடகம் தடுப்பணை பகுதிகள், மேலக்கால் பாலம், சோழவந்தான் வைகையாற்று சனீஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில், போலீஸார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!