Home செய்திகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர வாடிவாசல் அமைக்கப்படுவதை கண்டித்து , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர வாடிவாசல் அமைக்கப்படுவதை கண்டித்து , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார்.

by mohan

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டானது தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தொடங்கி பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர வாடிவாசல் உள்ள நிலையில் அவனியாபுரத்தில் நிரந்தர வாடிவாசல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கான மண் பரிசோதனையானது அவனியாபுரம் கம்மா கரையை ஒட்டி உள்ள இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யக் கூடிய இடத்தில் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கான மண் பரிசோதனை செய்ய வந்துள்ளதையும் மேலும் இறந்தோருக்கு ஈமச்சடங்கு செய்யக்கூடிய இடத்தில் நிரந்தர வாடிவாசல் அமைக்கப்படுவதை கண்டித்து அவனியாபுரம் காவல் நிலையத்திலும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் அளித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com