47
மதுரை மாவட்டம்.திருப்பரங்குன்றம் அருகே ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளித்து, வீடுகளுக்கு அருகில் மழை நீர் தேங்க விடாமல் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கினர்சுகாதாரத்துறை சார்பில் வட்டாரமருத்துவர் Dr. சிவகுமார். வட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி சுகாதார ஆய்வாளர்கள் ஜெயகுமார். ஆண்டணி, வரதராஜ்மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வீடுதோறும் ஆய்வு செய்தனர்.மேலும் மருத்துவ முகாம் மூலம் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. கொரோனா தடுப்புசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.