Home செய்திகள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல . சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல . சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பேட்டி.

by mohan

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது குறித்தகேள்விக்கு.?பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லை என்பது காலம் காலமாக நடந்து வந்துள்ளது., இதற்கு முன் யாரும் தைரியமாக புகார் அளிக்கவில்லை.தற்போது புகார் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தைரியமாக மாணவிகள் புகார் அளிக்கின்றனர்.வெளிப்படையான தீர்வுகாண வேண்டுமென்றால் பெண் குழந்தைகளுக்கு உடனடியாக புகார் அளிக்க தைரியத்தை கொடுக்க வேண்டும்.தொடர் மழை இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?காலநிலை மாற்றத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது., பருவநிலை மாற்றத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது பழி சுமத்துவது தவறு நீர் தேங்கும் இடங்களில் வீடு கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது அதனால் வந்துள்ள பிரச்சனை., அதை தடுக்க வேண்டும்.அரசு நிறுவனங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து மாற்றி திருச்சி அருகே கொண்டு வர வேண்டும் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது இருந்தபோதிலும் அனைவரும் சென்னை நாடுவது தவறு., அனைத்து அதிகார மையங்களும் சென்னையில் உள்ளது தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு முக்கியமான அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகத்தை கூட மாற்றலாம். அதிகார பங்கை மற்ற பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுத்தாள் சென்னையில் நெரிசல் குறையும் மற்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவது அதிகரிக்கும்.கலைஞர் உணவகம் அமைப்பது குறித்த கேள்விக்கு.சாப்பாடு ருசியாக இருந்தால் சரி மலிவான விலையில் சாப்பாடு ருசியாக இருந்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்., என சிரிச்சுக்கொண்டே பதில் அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!