50
வடகிழக்கு பருவ மழையினால், வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து வருகிறது.எனவே, வைகை ஆற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வைகை ஆற்றில் மற்றும் ஓடைகளில் இறங்க கூடாது என பொது நலன் கருதி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் அறிவிக்கிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.