Home செய்திகள் அனைவராலும் போற்றப்படும் திரைப்படமாக ஜெய்பீம் மாறியதை பொறுத்துக் கொள்ள முடியாத பாமாகா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அனைவராலும் போற்றப்படும் திரைப்படமாக ஜெய்பீம் மாறியதை பொறுத்துக் கொள்ள முடியாத பாமாகா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

by mohan

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக விவசாய சட்டத்தினை மோடி அரசு ரத்து செய்யதுள்ளது.- விருதுநகர்எம்பி மாணிக் தாகூர்முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் திருப்பரங்குன்றம் ஐவராத நல்லூர் பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி கூறுகையில்:வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்த கேள்விக்கு:700க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் போராடியே மரணம் அடைந்துள்ளார்கள். எனவே இதை கௌரவமாகவும் மரியாதையாகவும் செய்ய வேண்டியதை மிகவும் கீழ்த்தரமாக செய்துள்ளார் மோடி இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல். எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் போராட்டம் செய்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி இது.ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக மதுரை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த வேளாண் சட்டங்கள் கண்டிப்பாக திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தார் .இன்று அது நடந்துள்ளது.விவசாயத்தை அழிக்க நினைத்த மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி இது.இந்திராகாந்தி கூறி இருப்பதைப் போல நாங்கள் தேர்தலைப் பற்றி கவலைப்படுபவர்கள் கிடையாது அடுத்த தலைமுறை தான் முக்கியம் என்று சொன்னார்.ஆனால் மோடியை பொறுத்தவரை தேர்தல் தான் அவரின் முடிவை நிர்ணயிக்கிறது. இடைத்தேர்தல்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததுஇப்போது பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக விவசாய சட்டத்தினை ரத்து செய்ய வழி வகுத்துள்ளது.தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் குறித்த கேள்விக்கு:வடிவேல் மீண்டும் வெள்ளித்திரைக்கு வருவதைப்போல பாஜகவினரின் அட்டூழியமும் காமெடியாக உள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் பங்குகள் முன்னால் யார் படம் உள்ளது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும் இப்படிப்பட்ட காமெடி பீசாக இருக்கக்கூடிய பிஜேபிகள் தங்களது நாடகங்களை நிறுத்த வேண்டும். தமிழக மக்கள் ஒத்த போட்டு பிஜேபி யாக மாற்றியுள்ளனர். எல்லாம் செய்தார்கள் என்றால் அந்த ஒத்த ஓட்டும் இழக்கக் கூடிய நிலை வரும்.ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்த கேள்விக்கு:பாமக எப்போதெல்லாம் தேர்தலில் தோல்வியுறுகிறதோ அப்பொழுதெல்லாம் வன்னிய சமூகத்தின் அடையாளங்கள் தேவைப்படுகிறது.பாமக வன்னிய சமூகத்திலிருந்து உருவானாலும் கூட அவர்கள் ராமதாசின் குடும்பத்திற்காக வே செயல்படுகிறார்கள். அனைவராலும் போற்றப்படக்கூடிய திரைப்படமாக ஜெய்பீம் மாறியதன் விளைவாக பொறுத்துக் கொள்ள முடியாத பாமாகா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com