Home செய்திகள் தேனி மற்றும் மதுரை அகல ரயில் பாதை சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை.

தேனி மற்றும் மதுரை அகல ரயில் பாதை சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.தேனி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை.

by mohan

தெற்கு இரயில்வே – பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் – 2021 தெற்கு ரயில்வே சார்பில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ரயில்வே காலனியில் உள்ள வைகைை இல்லத்தில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் மதுரை ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ரயில்வேயின் பொது மேலாளர் ஸ்ரீ பி.ஜி. மாலியா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ பிரஃபுல்லா ஷர்மா , மதுரை மண்டல மேலாளர் ஸ்ரீ பி . ஆனந்த் மற்றும் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர் .இக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவதுதேனி மற்றும் மதுரை இடையேயான அகல ரயில் பாதை சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தேனி முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் , ரயில் எண் . 20601/20602 , சென்னை சென்ட்ரல்- மதுரை – சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் குளிர்சாதன விரைவு ரயிலை போடிநாயக்கனூர் வரை இயக்க வேண்டும் என்றும் ,திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் பகுதி வரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்றும்.பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்மேலும் மதுரை போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தேன் அதனைத்தொடர்ந்து இந்த இரண்டரை ஆண்டு காலங்களில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன இன்னும் ஆறு மாதங்களில் பணி முழுமையாக நிறைவடைந்து விடும்ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் உள்ளனர் அதேபோல் தமிழர்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் இதுதான் என் கருத்தாகும்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com