Home செய்திகள் நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் கார் நேருக்கு நேர் மோதி 2 இளைஞர்கள் பலி.

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் கார் நேருக்கு நேர் மோதி 2 இளைஞர்கள் பலி.

by mohan

மதுரை மாவட்டம், மதுரை ஏர்போர்ட், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமு என்ற காமராஜ் வயது 21. அஜித் கண்ணன் வயது 21. மற்றும் இவரது நண்பர்கள் 20 பேர்கள் 10 மோட்டார் சைக்கிளில் கடந்த 5ஆம் தேதி சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா என்றார்கள். இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் 2 தினங்கள் சுற்றிவிட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன்கோயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தற்போது மதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது. இதில் அஜித் கண்ணன் சினிமா பட சம்பவம் போல் மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 10 அடி உயரம் பறந்து சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் தொங்கினார். அதேபோன்று காமு என்ற காமராஜ் அப்பகுதியில் காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்து போனார். மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த வரை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் ஆகியோர்கள் தலைமையில் போலீசார்கள் விரைந்து சென்று 2 பேர் உடல்களையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடன் வந்த நண்பர்கள் இரண்டு பேர்கள் கண் கண் நண்பர்கள் கண் முன்னே காரில் மோதி இறந்த சம்பவத்தை பார்த்த இளைஞர்கள் கதறி துடித்து அழுத காட்சி நெஞ்சை கலங்க செய்தது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!