Home செய்திகள் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

by mohan

மதுரை மாவட்ட, மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில், கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அறுவுறுத்தினார்.மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி 51 மனுக்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றகோரி 12 மனுக்கள் சாதிச்சான்றுகள் வேண்டி 3 மனு, குடும்ப அட்டை தொடர்பான 1 மனு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்டஉதவித்தொகை தொடர்பான 11 மனுக்கள் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 37 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரியது (சாலை தெருவிளக்கு தண்ணீர் குழாய் பேருந்து வசதி தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) தொடர்பான 15 மனுக்கள் புகார் தொடர்பான 5 மனுக்கள் கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியது தொடர்பான 10 மனுக்கள், திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான 1 மனு, பென்சன் நிலுவைத்தொகை ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 8 மனுக்கள்தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் இராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 148 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 156 என மொத்தம் 458 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கோ.செந்தில்குமாரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்.ராஜ்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!