Home செய்திகள் மதுரையில், இலவச பரிசோதனை முகாம்: போலீஸ் எஸ்.பி. தொடங்கி வைப்பு:

மதுரையில், இலவச பரிசோதனை முகாம்: போலீஸ் எஸ்.பி. தொடங்கி வைப்பு:

by mohan

காவல்துறையில் பணியின்போது, உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில்,இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மதுரை மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, மதுரை ராக்ஸ் மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட காவல் துறையினர் இணைந்து இலவச பரிசோதனை முகாம் இன்று நடத்தப்பட்டது.இம் முகாமினை, குத்துவிளக்கேற்றி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வி.பாஸ்கரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில், மதுரை மாவட்ட காவலர்கள் மற்றும் காவலரின் குடும்பத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ஹீமோகுளோபின் போன்றவைகள் மற்றும் இதய வலி நோய்கள் போன்றவற்றை முற்றிலும்அதிநவீன மயமாக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதீத நோயுள்ளவர்களுக்கு அவர்களுக்கு தேவையான தகுந்த மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினார்கள்.இந்த மருத்துவ முகாமில், மதுரை மாவட்ட ஆயுதப்படை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த, இலவச மருத்துவ முகாமை மாவட்ட காவல் துறையோடு இணைந்து ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக நன்றி தெரிவிக் கப்பட்டது.இந்த இலவச மருத்துவ முகாமில், மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com