Home செய்திகள் சாலையில் சிறார்களை பிச்சை எடுக்க விடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர்:

சாலையில் சிறார்களை பிச்சை எடுக்க விடுவோர் மீது நடவடிக்கை: அமைச்சர்:

by mohan

சாலைகளில் குழந்தைகளை,பிச்சை எடுக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியது:தமிழக முதல்வர், பெண்கள், குழந்தைகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார்.திருமண உதவி திட்டம் கேட்டு இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கு, தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் சில மாற்றங்கள் கொண்டு வர ஆலோசிக்கப்படுவதாகவும், திருமண நிகழ்சிகள் பதிவு செய்த பின், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.தமிழகத்தில் சிறு வயதில் திருமணம் செய்வது குறைந்து வருவதாகவும், பாலிய திருமணத்தை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடந்த ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, எட்டு கிராமமாக உயர்த்தப்பட்டாலும், அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லையென, குற்றம் சாட்டினார் அமைச்சர்.முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில், அமைச்சர் பி. மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com