Home செய்திகள் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சி

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சி

by mohan

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சியினை, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், துவக்கி வைத்தார்.அறிவியல் துறையில் மாணவர்களின் திறமையை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஹெச்.சி.எல். அறக்கட்டளையில் சார்பாக நவீன அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக ,இந்த ஆண்டு இளம் கலாம் அறிவியல் கண்காட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள 24 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இந்த அறிவியல் கண்காட்சியில், புதுமையான ஆற்றல், நவீன படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அறிவியல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டுள்ளதையும், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு வைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியினையும் ஆணையாளர், பார்வையிட்டார். மேலும், கண்காட்சி தொடர்பான விளக்கங்களை ஆணையாளர், மாணவிகளிடம் கேட்டு உரையாடினார்.இந் நிகழ்ச்சியில், கல்வி அலுவலர் (பொ)ராஜேந்திரன், ஹெச்.சி.எல். நிறுவன செயல் இயக்குனர்திருமுருகன், உதவி மேலாளர்,சாமுவேல் எபினேசர், திட்ட அலுவலர்பி.பிரபாகர், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com