43
மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சந்தில் ( 71 வார்டு) )பல நாட்களாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. நான்கு முனை சந்திப்பிலும் இந்த கழிவுநீர் தேங்கி கொண்டிருப்பதும் இல்லாமல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கேட்ட போது பலமுறை மாநகராட்சி இடம் புகார் கொடுத்தோம் தற்காலிகமாக சரி செய்து சரி விட்டு போகிறார்கள் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை தொடர்வதால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சியின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.