மின்வாரிய அலுவலகத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதி மின் வாரிய அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் தற்போது ஜி எஸ் டி சாலையில் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ளது. பல வருடங்களாக இந்த் அலுவலகம் இங்குள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் மிகவும் பழமையான நிலையில் உள்ளதால். இந்த பகுதி அலுவலகத்தை நிலையூர் அருகிலுள்ள ஓம்சக்தி நகர் பகுதிக்கு மாற்ற மின்வாரிய உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் மற்றும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் நேற்று இங்குள்ள அலுவலகத்தை நிலையூர் அருகிலுள்ள ஓம்சக்தி நகர் பகுதிக்கு மாற்றக்கூடாது எனவும் இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்கள் கரண்ட் பில் கட்டுவதற்கு, மின் புகார் பதிவு செய்வது உள்ளிட்டவற்றிற்க்கு நீண்ட துரம் செல்ல வேண்டியிருப்பதோடு. தற்போது நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் மாற்றப்பட்டால் பேருந்து அல்லது ஆட்டோ ஆகியவற்றின் மூலமே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதால் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாக நேரிடும் என கூறி இந்த அலுவலகத்தை இப்பகுதி பொதுமக்கள் எளிதில் சென்றும் வருமாறு திருப்பரங்குன்றம் நகர் பகுதிக்குள் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மின்வாரிய உதவி பொறியாளரிடம் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..