
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர் ஓவியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தற்பொழுது தொலைக்காட்சிகளில் வரும் பெயிண்ட் விளம்பரத்தில் “எல்லாத்தையும் அவர் பாத்துக்குவார்” என்ற விளம்பரத்தின் மூலம் தங்களின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறி அந்த விளம்பரத்தை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர் .இதில் தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோம் முன்னேற்ற கழக மாநில தலைவர் உமாமகேஸ்வரன் செயலாளர் ஜெய்கணேஷ் பொருளாளர் சத்ய பிரபு மற்றும் யோகேஸ்வரன் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.