
தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் (Election Observer) முனைவர் சங்கர் IAS தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.கோபால சுந்தர ராஜ் IAS மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.