
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்த ராயர் மண்டபத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பயங்கர தீ விபத்தில் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது,இந்தநிலையில் மண்டபத்தை புனரமைக்க தமிழக அரசு சார்பாக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில்,கடந்த சில மாதத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளது,நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் பணி தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்,இந்த நிலையில் புனரமைப்பு பணிக்கு ஒப்பந்த புள்ளியை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது,ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த வருகின்ற அக்டோபர் 27 தேதி 3 மணிக்குள் கோவில் வளாகத்தில் செலுத்த வேண்டும் எனவும்,மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க காலத்திற்குள் முடிக்கபடவேண்டும் என்றும்,கோவில் நிர்வாகம் சார்பாக கற்கள் இலவசமாக வழங்கப்படும்,தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம்,கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் கலைநயமிக்க வகையில் புணரமைக்க வேண்டும் என்றும்,கடந்த ஆண்டு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்டது,மேலும் பழமை மாறாமல் புனரமைப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.