கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகை: போலீஸார் செய்து காட்டினர்.

கலவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்த ஒத்திகையானது, மதுரை மாவட்ட காவல்துறை ஆயூதப்படை மைதானத்தில் நடைபெற்றது.மதுரை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையில், மதுரை மாவட்ட ஆயூதப் படை போலீஸார், ஒத்திகை நிகழ்வை நடத்தினர்.பெரும் கலவரம் ஏற்படும்போது, உயிர் சேதம், பொருள்கள் சேதமின்றி மக்களை எப்படி காப்பது என்பது குறித்த நிகழ்வினை, போலீஸார் செய்து காட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..