அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் முன்னிலையில், அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் முன்னிலையில், அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார், சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அதனைத் தொடர்ந்து, மதுரையில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட செயலாளர் பொய்கை சோ‌. மாரியப்பன், மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.பெருமையா பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே பொன்னுச்சாமி, கடையநல்லூர் நகரச் செயலாளர் கமாலுதீன், செங்கோட்டை நகர செயலாளர் எம் ராமசாமி, ஆகியோர் கழக இணை ஒருங்கிணைப் பாளரும்,முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்இந்த நிகழ்ச்சியில், கழக அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்,தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் .வி.வி ராஜன்செல்லப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..