பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 மற்றும் 76 ஆவது வார்டு சுற்றியுள்ள பல பகுதிகளில் குப்பைகள் அல்ல படாமல் பல நாட்களாக இருக்கிறது மேலும் இந்த குப்பைகள் துர்நாற்றம் வீசி சாலையில் சிதறி கிடைக்கிறது தினசரி குப்பைகள் இல்லாமல் இருப்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து இருப்பதாலும் அதில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகள் கலந்திருப்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது மேலும் 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோட்டில் உள்ள மேக்ஸ் அப்பார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அருகே அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் வெளியேறி சாலையில் கொட்டி கிடக்கின்றன இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பைகளை சாலையில் கொட்டாமல் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளுக்குள்ளேயே குப்பைத் தொட்டிகள் அமைத்து மாநகராட்சிகள் அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது மேலும் பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பைகள் அல்லாமல் இருக்கின்றனர் பிளாஸ்டிக் பைகளில் கழிவு மற்றும் காய்கறி குப்பைகளை சாலையில் தூக்கி எறிவதாக கால்நடைகளை அதை உண்பதற்காக பிளாஸ்டிக் பையுடன் சாப்பிட்டு விடுகின்றனர் இதனால் கால்நடைகள் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் சிக்கி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை களைய மாநகராட்சி அதிகாரிகள் தினசரி குப்பைகளை அகற்றி பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்