வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த காசிவிசுவநாதன் வீட்டில் திடீர் சோதனை .

மதுரை திருமங்கலம் கப்பலூர் பகுதியில் காந்திநகரில் மத்திய தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் மற்றும் சிங்களர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து காவல் துறையால் கைது செய்யப்பட்ட காசி விஸ்வநாதன் 30 / 2021 என்பவர் மதுரை கப்பலூர் பகுதியில் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட 22 இலங்கைத் தமிழர்கள் மற்றும் இரண்டு சிங்களர்கள் அழைத்து வரப்பட்டு மதுரை கப்பலூர் கூத்தியார்குண்டு பகுதியில் தனியாக தங்க வைத்திருந்தார்கள் இதனை பார்த்த பொதுமக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து கியூ பிராஞ்ச் போலீசார் காசிவிசுவநாதன் என்பவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதே சம்பவம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மங்களுரில் நடைபெற்றது .இதில் 30 பேர் பாதிப்பு அடைந்தனர் எனவே இரண்டு சம்பவத்தில் தொடர்புடைய காசி விஸ்வநாதன் இடை தரகராக செயல் பட்டார். அதன் அடிப்படையில் அவர் வீட்டை சோதனை செய்த மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கை பணம் மற்றும் லேப்டாப் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறபடுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..