தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியார் படிப்பகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு இராஜபாளையம் நகர ஒன்றிய அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .நகரச் செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் . மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் AD துரைமுருகேசன் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மாணவர் மகளிர் அணி பொறுப்பாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பெரியார் புகழ் ஓங்குக அண்ணா நாமம் வாழ்க என அதிமுக சார்பில் கோசங்கள் போட்டு மரியாதை செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..