
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குதெரு ஊராட்சி மன்ற தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நொண்டிவீரன் என்பவரு க்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பாண்டியராஜன் கட்டையால் அடித்ததில் நொண்டிவீரன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இறந்த நொண்டிவீரன் உடலைக் கைப்பற்றி மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.